தோனியை தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் இவர்தான்.. சுரேஷ் ரெய்னா!
முன்னாள் இந்திய கேப்டன் தோனியைத் தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் யாரேனும் இருந்தால், அது சூர்யகுமார் யாதவ் தான் என்று முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுரேஷ் ரெய்னா கூறுகையில், 2023 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் ஃபினிஷராக விளையாட வேண்டும். சூர்யகுமார் முக்கியமான பாத்திரத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.
எம்எஸ் தோனியை தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர், ஒரு டைனமிக் பேட்டர், இன்னிங்ஸின் போக்கை மாற்றக்கூடியவர் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 50 ஓவர் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து சூர்யகுமார் அதிர்ச்சியில் இருந்தார்.
இருப்பினும் 2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக அவர் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பினார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் 50 மற்றும் 72* ரன்களை பதிவு செய்தார் எனவும் கூறினார். மேலும், சுப்மான் கில் குறித்து பேசிய ரெய்னா, இந்தியாவின் சிறந்த வீரராக சுப்மான் கில் இருப்பார் என்றும் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார்.
கில் மற்றும் ரோஹித் சர்மாவின் தொடக்க ஜோடி என்பது சச்சின் டெண்டுல்கர்-வீரேந்திர சேவாக் மற்றும் டெண்டுல்கர்-சௌரவ் கங்குலி போன்ற வெற்றிகரமான ஜோடிகளுடன் ஒப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 உலகக் கோப்பையின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் ஷுப்மான் கில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், சமீபத்திய தகவல்களின்படி, ஷுப்மான் கில்லுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் வருத்தம் தெரிவித்தார். மேலும், மூத்த லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியில் இருந்து விலகிய குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர். தேர்வாளர்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்றும் இருப்பினும், ரோஹித் ஷர்மா மற்றும் தேர்வாளர்கள் குல்தீப் யாதவை தேர்வு செய்ய ஆதரவு அளித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.