முன்னாள் கிரிக்கெட்டர் அனுஷ்மான் கெய்க்வாட் காலமானார் ..! பிரதமர் மோடி, ஜெய் ஷா இரங்கல்!!

Anshuman Gaekwad Passed Away

அனுஷ்மான் கெய்க்வாட் : இந்திய அணியின் முன்னாள் வீரரான அனுஷ்மான் கெய்க்வாட் 1974-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி,15 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கிட்ட தட்ட 10 ஆண்டுகள் இந்தியா அணிக்காக விளையாடினார்.

அதன்பின் 1997-1999 மற்றும் 2000 ஆண்டுகளில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். அனுஷ்மான், சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் உட்பட அவருடன் விளையாடிய வீரர்கள் ஒரு சிலர் உதவி செய்தார்கள்.

மேலும், பிசிசிஐயும் அவருக்கு ரூ.1 கோடி நிதியுதவியும் அளித்தது. தற்போது, அவரது 71-வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரதமர் மோடியும், பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷாவும் எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி அவரது எக்ஸ் பதிவில், “அனுஷ்மான் கெய்க்வாட் கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்பிற்காக நினைவு கூறப்படுவார். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் ஒரு சிறந்த பயிற்சியாளர், அவரது மறைவு வேதனை அளிக்கிறது, அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனுஷ்மான் கெய்க்வாட்டின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இணையத்தில் அவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்