நடப்பு ஆண்டிற்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடினார்.
பின் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சுப்மன் கில் (4), ஸ்ரேயாஸ் ஐயர் (4), ஜடேஜா (9) என அடுத்தடுத்து அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். முந்தைய போட்டிகளைப் போலவே, இந்த போட்டியிலும் விராட் கோலி சதமடிப்பார் என்று எதிர்க்கப்பட்ட வேளையில், அவரும் 54 ரன்களில் வெளியேறினார். இதனால் மைதானம் முழுவதும் அமைதியானது.
இதையடுத்து, கே.எல்.ராகுல் மட்டுமே 66 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் பெரிதாக சோபிக்காமல் தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மார்னஸ் லாபுசாக்னே அரைசதம் கடக்க, இறுதியில் 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வென்று, 6வது முறையாக சாதனை படைத்தது. இதனால் வருத்தமடைந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினார்கள்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி வீரர்களும் கவலையில் கண்ணீர் விட்டனர். அவர்களுக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். கேப்டன் ரோஹித் ஷர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி இருவர் கண்களிலும் கண்ணீர் வந்தது. இந்நிலையில், வருத்தமடைந்த விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆறுதல் கூறினார்.
வீரர்கள் அனைவரும் கவலையால் மைதானத்தை விட்டு வெளியேறியதும், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, அவருக்கு ஆறுதல் கூறிக் கட்டிப்பிடித்து அரவணைத்துக் கொண்டார். தற்போது அவர் அனுஷ்கா சர்மா ஆறுதல் கூறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், விராட் கோலி 2023 உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அதன்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 11 போட்டிகளில் அதிகபட்சமாக 765 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…