உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் மற்றொரு தென்னாப்பிரிக்கா வீரர்!!
தென் ஆப்பிரிக்காவின் ஆல் ரவுண்டர் ட்வெய்ன் பிரிட்டோரியஸ், டி-20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தற்போது விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ட்வெய்ன் பிரிட்டோரியஸ் இடது கைபெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியா-தென்னாபிரிக்கா மோதிய 3 ஆவது டி-20 போட்டியின் போது பிரிட்டோரியஸ் காயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2022 ஆம் ஆண்டு 8 டி-20 போட்டிகளில் விளையாடிய பிரிட்டோரியஸ் 12 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
கடந்த மாதம் ராசி வான்டெர் டசன் விரலில் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியதை அடுத்து தற்போது தென் ஆப்பிரிக்கா அதன் இரண்டாவது முக்கிய வீரரையும் உலகக்கோப்பை தொடரில் இழந்துள்ளது.
தென்னாபிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ரில்லி ரோசோவ், தப்ரைஸ் ஸ்டம்ப்சி (பிரிட்டோரியஸ்க்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை ) பெஞ்ச் வீரர்கள்: ஜோர்ன் பார்ச்சுன், மார்கோ ஜான்சன், ஆண்டிலே பெலுக்வாயோ
#PROTEAS SQUAD UPDATE ????
All-rounder Dwaine Pretorius has been ruled out of the three-match ODI series against India and the proceeding ICC Men’s T20 World Cup due to a fracture of his left thumb.#BePartOfIt pic.twitter.com/SZqvx0x5Ro
— Proteas Men (@ProteasMenCSA) October 6, 2022