டி-20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தீபக் சஹர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அக்-16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை திருவிழா தொடங்கவிருக்கிறது. இதற்காக இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதற்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த தீபக் சஹர் காயம் காரணமாக தற்போது விலகியுள்ளார்.
ஏற்கனவே ஆசியக்கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகிய ரவீந்திர ஜடேஜா இன்னும் முழுமையாக குணமடையாததால் அவரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறவில்லை. அதன் பின் இந்தியாவின் முக்கிய பௌலர் பும்ரா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் காயமடைந்து விலகினார். தற்போது இந்த பட்டியலில் தீபக் சஹரும் இணைந்துள்ளார். அவருக்கு பதிலாக ஷார்துல் தாக்குர், ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இந்திய அணியில் இணைவார்.
இந்த நிலையில் மொஹம்மது ஷமி, மொஹம்மது சிராஜ், மற்றும் ஷார்துல் தாக்குர் ஆகியோர் ஆஸ்திரேலியா சென்று அணியுடன் இணைய உள்ளனர். இவர்களில் ஒருவர் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் மொஹம்மது சிராஜ், தென்னாப்பிரிக்காவிற்கெதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியா தொடரை வெற்றி பெற முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…