ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது.
நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து மோதுகிறது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முனைப்புடன் விளையாடுவார்கள். மேலும், இந்த இரண்டு அணிகளும் கடந்த போட்டியில் வெற்றியுடன் இந்த போட்டியில் மோதுகின்றன. மேலும், ஐபிஎல் தொடரில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதினால் அந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நேருக்கு நேர்
இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக மொத்தம் 18 போட்டிகள் விளையாடி உள்ளனர். இதில் 15 முறை சென்னை அணியும், 13 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் சென்னை ஆதிக்கம் இருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
சென்னை
ருதுராஜ் கெய்க்வாட் (c), ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, டேரில் மிட்செல், எம்எஸ் தோனி (wk), சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே, மதிஷா பத்திரனா
பஞ்சாப் அணி :
ஜானி பேர்ஸ்டோவ், அதர்வா டைடே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, சாம் கர்ரன் (கேப்டன்), ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025