அடேங்கப்பா ..!! விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மானாக தோனி செய்த மற்றொரு சாதனை ..!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ஓரு விக்கெட் கீப்பராக பல சாதனைகளை தோனி செய்துள்ளார் என்பது நமக்கு தெரியும் அதிலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக அவர் மற்றும் ஒரு சாதனையை கைவசம் வைத்துள்ளார்.
2008- ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடர்களில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக தோனி 5119 ரன்களை எடுத்து தற்போது வரை விளையாடி கொண்டிருக்கிறார். இதில் ஒரு விக்கெட் கீப்பராக 5000 ரன்களை கடந்த முதல் வீரரும் தோனி தான். மேலும், ஒரு விக்கெட் கீப்பராக 2000, 3000, 4000 ரன்களை கடந்த வீரரும் தோனியாக தான் இருக்கிறார்.
மேலும், ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக டெக்கான் சார்ஜெர்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய ஆடம் கில்கிறிஸ்ட் இடம் பெற்றுருக்கிறார். ஆனால், அதன் பிறகு மைல்கல்லான முதல் 2000, 3000, 4000 மற்றும் 5000 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக தோனி இடம் பிடித்து மற்றும் ஒரு சாதனையை தனது கை வசம் வைத்துள்ளார்.
ஒரு விக்கெட் கீப்பராக இந்த சாதனையை செய்வது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று நாம் நினைத்தால் அது தவறு, ஏனென்றால் ஆடம் கில்க்ரிஸ்ட்டும் விக்கெட் கீப்பராக தான் முதல் 1000 ரன்களை கடந்தார். ஆனால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார். அதிலும் தோனி 6-வது அல்லது 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கி இப்படி பட்ட மைல் கல் சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் தோனி ஒரு சிறப்பான வீரராக எப்ப்போதுமே செயல்படுகிறார்.