இந்திய மகளிருக்கான ஆண்டு ஒப்பந்தம்.. ரூ.50 லட்சத்தில் 3 வீரர்கள் – பிசிசிஐ அறிவிப்பு
2022-23 சீசனுக்கான இந்திய மகளிர்களுக்கான வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2022-23 சீசனுக்கான இந்திய சீனியர் மகளிர் அணிக்கான வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை அறிவித்தது. இதில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் கிரேடு ஏ பிரிவில் (ரூ.50 லட்சம்) சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்று, ரேணுகா தாக்கூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் கிரேடு பி பிரிவில் (ரூ.30 லட்சம்) உள்ளனர். மேக்னா சிங், தேவிகா வைத்யா, சபினேனி மேகனா, அஞ்சலி சர்வாணி, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ராதா யாதவ், ஹர்லீன் தியோல், மற்றும் யஸ்டீன் தியோல், பாட்டியாவை கிரேடு ‘சி’ பிரிவில் சேர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டில், 2022 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு மிதாலி ராஜ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் மூன்று வடிவங்களிலும் இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு ஒப்பந்தம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தாக்கூர், ஒரு நட்சத்திர சீசனுக்குப் பிறகு நேராக பி பிரிவுக்குள் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
???? NEWS ????: BCCI announces annual player retainership 2022-23 – Team India (Senior Women). #TeamIndia
More Details ????https://t.co/C4wPOfi2EF
— BCCI Women (@BCCIWomen) April 27, 2023