CSK மீதான விமர்சனம்.., “இனி அப்படி நடக்காது” விளக்கம் கொடுத்த அஸ்வின் யூடியூப் சேனல்!

CSK வீரர் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்படும் கருத்துக்கள் அவரவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே தவிர அது அஷ்வின் கருத்து இல்லை என யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

R Ashwin

சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி கண்டு அடுத்தடுத்து பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு எதிரான போட்டிகள் என மூன்றிலும் தொடர் தோல்வி அடைந்து தரவரிசை பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் CSK வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூ-டியூப் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான விமர்சனம் எழுந்தது கடும் விவாதத்திற்கு உள்ளானது.  அனுபவம் வாய்ந்த அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை விட ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவை விளையாட வைக்கும் சிஎஸ்கேவின் முடிவு குறித்து அஷ்வின் யூடியூப் பக்கத்தில் நடந்த விவாத நிகழ்வில் கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.

இது விவாத பொருளாக மாறிய நிலையில், சனிக்கிழமை டெல்லி உடனான தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய CSK பயிற்சியாளர் பிளம்மிங்கிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அப்போது அவர், “எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. எனக்கு அப்படி ஒரு சேனல் இருப்பது கூட தெரியாது. அதனால் எனக்கு அதுபற்றிய கேள்விக்கு பதில் அளிப்பது பொருத்தமற்றது.” என கூறினார்.

இவ்வாறாக பல்வேறு எதிர்வினைகளை அடுத்து, அஷ்வின் யூடியூப் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், கடந்த வாரத்தில் இந்த யூடியூப் பக்கத்தில் நடந்த விவாதங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அது தொடர்பாக நாங்கள் விளக்கம் அளிக்க உள்ளோம். அந்த விஷயத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள விரும்புகிறோம்.

அதனால் இனி நடப்பு சீசன் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் தொடர்பான முன்னோட்டங்கள் மற்றும் போட்டிக்கு பிந்தைய விமர்சனங்கள் என இரண்டையும் இனி அஷ்வின் யூடியூப் சேனலில் பதிவிட மாட்டோம். மேலும், எங்கள் நிகழ்ச்சிகளில் வரும் பல்வேறு கண்ணோட்டங்களை நாங்கள் மதிக்கிறோம்.  எங்கள் யூடியூபில் விருந்தினர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் CSK வீரர் அஷ்வினின் தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. ” குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்