இந்திய அணிக்கு எதிராக 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி, டி-20 உலகக்கோப்பை தொடரையடுத்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக விளையாடும் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டி-20 தொடர் வரும் வெள்ளிக்கிழமை நவ-18 ஆம் தேதி தொடங்குகிறது. கேன் வில்லியம்சன் டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக நியூசிலாந்தை வழி நடத்துகிறார். இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் க்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஃபின் ஆலன் இந்த தொடருக்காக முதன்முறையாக இந்தியாவிற்கு எதிராக களமிறங்குகிறார். 23 வயதான ஃபின் ஆலன் நியூசிலாந்து அணிக்காக 23 டி-20 மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 அரைசதம் மற்றும் ஒரு சென்சுரி அடித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், இது குறித்து கூறும்போது அனுபவமிக்க போல்ட் மற்றும் மார்ட்டின் கப்தில் ஆகியோரை அணியிலிருந்து நீக்கியது எளிதான விசயம் இல்லை, இருந்தாலும் அணியின் முன்னேற்றம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
முதல் டி-20 போட்டி வெல்லிங்டனில் நவ-18 லும், 2 ஆவது டி-20 போட்டி தாறங்காவில் நவ-20 லும், 3 ஆவது டி-20 போட்டி நேப்பியரில் நவ-22 லும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நவ-25 இல் தொடங்குகிறது. 2 ஆவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நவ-27 லும், 3 ஆவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நவ-30லும் நடைபெறுகிறது.
நியூசிலாந்து ஒருநாள் அணி: கேன் வில்லியம்சன் (C), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி, டாம் லாதம் (WK), .
நியூசிலாந்து டி-20 அணி: கேன் வில்லியம்சன் (C), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே (WK), லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, பிளேர் டிக்னர்.
இந்தியா ஒருநாள் அணி: ஷிகர் தவான் (C), ரிஷப் பந்த் (VC & WK), ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (வி.கே), டபிள்யூ சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
இந்தியா டி-20 அணி: ஹர்திக் பாண்டியா (C), ரிஷப் பந்த் (VC & WK), இஷான் கிஷன், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார். , உம்ரான் மாலிக்
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…