கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு தடை – அனில் கும்ப்ளே விளக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா பரவலுக்கு எச்சில் முக்கிய காரணமாக கருதுவதால், இனிமேல் பந்துகளின் எச்சில் தடவக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரவலுக்கு எச்சில் முக்கிய காரணமாக கருதுவதால், பந்து வீச்சாளர்கள் பந்துகளின் பளபளப்புக்கு எச்சில் தடவக்கூடாது என்று ஐசிசிஐ தெரிவித்தது. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனில் கும்ப்ளே தலைமையிலான தொழில்நுட்ப குழு, மருத்துவ துறை தலைவருடன் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தனர்.

இதுகுறித்து கூறிய அனில் குப்ளே, நாம் தற்போது அசாதாரண சூழ்நிலையில் வாழ்கிறோம் என்றும் மருத்துவ குழு அளித்துள்ள பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாக்கும் என்று கூறினார். அதே வேளையில் எங்கள் விளையாட்டின் சாரத்தை பாதுகாக்கும் வகையில் கிரிக்கெட்டை பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கான இடைக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

இந்நிலையில், பந்து வீச்சாளர்கள் பந்துகளின் எச்சில் தடவுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தற்காலிகமானதே என்று ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பாதிப்பு கட்டுக்குள் வந்து விட்டால், இந்த தடை வாபஸ் பெறப்படும் என்றும் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மேலும், பந்தில் எச்சில் தடவுவதை நிறுத்தினால், ரிவர்ஸ் சிவிங் கலையை மேற்கொள்ள முடியாது என்று பந்து வீச்சாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனில் கும்ப்ளே விளக்கம் அளித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

19 minutes ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

1 hour ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

1 hour ago

ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…

2 hours ago

கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…

2 hours ago

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…

3 hours ago