இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றியும் சுப்மன் கில் பேட்டிங் பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இந்தியா தோல்வி குறித்து கும்ப்ளே
இந்திய கிரிக்கெட் அணி நன்றாக தான் விளையாடினார்கள். ஒரு சில இடங்களில் சில தவறுகள் நடந்தது. அந்த தவறுகளை அடுத்தப்போட்டிகளில் திருத்தி விளையாடவேண்டும். என்னைப்பொறுத்தவரை முதல் போட்டியில் இந்தியா இன்னும் நன்றாக விளையாடி இருக்கலாம். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் சற்று சொதப்பல் நடந்தது. ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் எல்லாம் அட்டமிழந்த சமயத்தில் தான் போட்டியே மாறியது. இங்கிலாந்து அணி மிகவும் அருமையாக விளையாடினார்கள்.
சுப்மன் குறித்து அனில் கும்ப்ளே
சுப்மன் கில் பேட்டிங் குறித்து பேசிய அனில் கும்ப்ளே ” இன்னும் சுப்மன் கில் சில பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோணுகிறது. ஏனென்றால்,அவர் டெஸ்ட் போட்டிகளில் எப்படி ரன்களை அடிக்கவேண்டும் என்பதனை கற்றுக்கொள்ளவேண்டும். இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி இருக்கும் புஜாராவுக்கு கிடைக்காத வாய்ப்பு கில்லுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த பலம் போதுமா? ரோட்னி ஹாக்கு கெத்தாக பதில் சொன்ன கிரேக் பிராத்வைட்!
எனவே, அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எப்படியெல்லாம் விளையாடலாம் என்று சொல்லி கொடுக்க அவர் பக்கம் ராகுல் ட்ராவிட் இருக்கிறார். எனவே, அவர் சொல்வதை கேட்டுவிட்டு அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக விளையாட முயற்சி செய்யவேண்டும். அதேசமயம் புஜாராவும் விளையாடி நீண்ட காலமாக ஆகவில்லை எனவே, கில் சரியாக விளையாடவில்லை என்றால் அடுத்ததாக வரும் போட்டிகளில் அவர் மீது அழுத்தம் அதிகமாகிவிடும் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் குறைய தொடங்கும்” எனவும் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…