ஐபிஎல் 2025 : 13 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வரும் ஆண்டர்சன்! குறி வைக்குமா சென்னை?
நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1,165 இந்திய வீரர்களும், 409 அயல்நாட்டு வீரர்களும் அடங்குவார்கள்.
மீண்டும் ஆண்டர்சன் :
இதில், ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 42 வயதான இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தங்களது அவரது பெயரைப் பதிவு செய்துள்ளார். சர்வதேச அளவில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த ஆண்டர்சன், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்குத் தனது ஆர்வத்தைத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த, 2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலும் தனது பெயரைப் பதிவு செய்த இவரை அந்த நேரத்தில் எந்த ஐபிஎல் அணிகளும் எடுக்கவில்லை. தற்போது, இந்த முறை ரூ.1.25 கோடிக்குத் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இதனால், இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி அவரை எடுக்கும் என்பதில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
குறி வைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் :
அதன்படி, பார்க்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை எடுக்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் கடந்த 2018-ம் ஆண்டில் சென்னை அணி வெற்றி பெற்ற போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த பாதிக்கும் மேலான வீரர்கள் 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் அனைவரும் அனுபவசாலிகள்.
இதனை வைத்து தான் இந்த முறை நடக்கும் ஐபிஎல் மெகா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆண்டர்சனைக் குறி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டர்சன் இந்த ஐபிஎல் ஏலத்தில் ஏதேனும் ஒரு அணியால் எடுக்கப்பட்டால் அவருக்கு இது முதல் ஐபிஎல் தொடர், அதாவது ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.