INDvsENG : அடேங்கப்பா .. 700 விக்கெட்டா ..! ஆண்டர்சன் படைத்த புதிய சாதனை ..!
INDvsENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று இங்கிலாந்து அணியின் மூத்த வேக பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார். ஒரு வேக பந்து வீச்சாளராக முதன் முதலில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்களை எடுத்துள்ளார்.
Read More :- INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு ..! இந்தியாவின் தூணை உடைத்த ஸ்டோக்ஸ் ..!
ஜேம்ஸ் ஆண்டர்சன், 2003-ம் ஆண்டு சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். நடைபெற்று பெற்று வரும் இந்த 5-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு வரை 21 வருடங்களாக இங்கிலாந்து அணிக்காக 186 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 698 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றி 699 விக்கெட்டுகளை நேற்றே எடுத்திருந்தார். ஆனால் அதன் பிறகு நேற்றைய நாளில் எந்த ஒரு விக்கெட்டையும் அவரால் எடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்றைய ஆட்டம் நிறைவடைந்தது, இன்று காலை தொடங்கிய 3-ம் நாள் ஆட்டத்தில் குலதீப் யாதவின் விக்கெட்டை எடுத்து 700 விக்கெட்டை எடுத்துள்ளார்.
Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!
இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வேக பந்து வீச்சாளராக முதன் முதலில் 700 விக்கெட்டுகளை எடுத்த வீரர் ஆனார் ஜேம்ஸ் ஆண்டர்சன். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை எடுத்த பட்டியலிலும் 3-வது வீரராக இடம் பிடித்துள்ளார். இதனால், புதிய சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.