இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆண்டர்சன் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார்.!
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்குடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாளான்று இன்று விளையாடிய இந்திய அணி 278க்கு ஆள் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84, ரவீந்திர ஜடேஜா 56 ரன்களும் நடித்திருந்தனர். இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 23ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 8 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டன் ஓவராக மாற்றியுள்ளார். இதில் மொத்தமாக 54 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய விக்கெட்களின் எண்னிக்கை 621ஆக உயர்ந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முன்னாள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்கள் வீழ்த்தி இந்தியகிரிக்கெட் வீரர் அனில் கும்ளே இரண்டாம் இடத்தில் இருந்தார். அதனை இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் முறியடித்து தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அனில் கும்ளே மூன்றாம் இடத்தில் உள்ளார்.