நேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி..! டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..!

Default Image

பாஜக மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான  அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கால சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.


இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்து உள்ளார்.அதில் கோலி கூறியது, அருண் ஜெட்லி  காலமானதைப் பற்றி கேள்விப்பட்டேன் . அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர் நேர்மையான மனிதர், எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்.

2006-ம் ஆண்டு எனது தந்தை மறைவின் போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர். அவரின் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
DURAIVAIKO
karunas edappadi
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech