அமித் மிஸ்ரா என்னிடம் சம்பளத்தை உயர்த்தி கேட்டார் – சேவாக்..!!

Default Image

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அமித் மிஸ்ராவை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 138 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசியத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார். சிறப்பாக பந்து வீசியதால் அமித் மிஸ்ராவை பலர் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அமித் மிஸ்ராவை பாராட்டியுள்ளார்.

இது குறித்து வீரேந்திர சேவாக் கூறுகையில், ” இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். பவர் பிளேயில் ஓவர் போது மிஸ்ரா பதற்றமடைந்தார், கவர்கள் மீது பவுண்டரிகளுக்கு சூர்யகுமார் யாதவ் அடித்தார். ஆனால் பவர் பிளே முடிந்ததும், மிஸ்ரா வலுவாக திரும்பி வந்தார். அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார் அதற்காக எனது பாராட்டுகள் என்றும்,  கடந்த 2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் நான் கேப்டனாக விளையாடிய போது அமித் மிஸ்ரா தனது முதல் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். அதற்காக உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் மிஸ்ரா  தயவுசெய்து என் சம்பளத்தை அதிகரிக்கச் செய்யுங்கள் என்று கேட்டார். அதை நான் இப்பொது உணர்கிறேன்”

அமித் மிஸ்ரா மிகவும் அமைதியானவர். அனைவரிடமும் பாசமாக பேசுவார் அதானல் தான் டெல்லி அணிக்கு அவரை மிகவும் பிடித்துள்ளது. அவர் விக்கெட் எடுக்கும் போதெல்லாம், அணியின் வீரர்கள் அனைவரும் அவருக்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள். சென்னையிலும் இலக்கைத் துரத்த முடியும் என்று டெல்லி அணி காட்டியது” என்றும் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்