நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு.இவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது .ஆனால் அம்பதி ராயுடு அணியில் சேர்க்காமல் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் காரணமாக விலகினார். அப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை.
உலகக்கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாததை குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார்.பின்னர் அம்பதி ராயுடு அனைத்து சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.இவரது அறிவிப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தனது ஒய்வு முடிவை அம்பதி ராயுடு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு ராயுடு மெயில் அனுப்பியுள்ளார்.அதில் ,தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் . ஓய்வு பெறுவதாக அறிவித்த முடிவு உணர்ச்சிபூர்வமான நிலையிலும் அவசரத்திலும் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
இந்த நெருக்கடியான சூழலில் எனக்குள் மீதியிருக்கும் கிரிக்கெட் திறனை உணர்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினருக்கும், விவிஎஸ் லக்ஷ்மனன் மற்றும் நோயல் டேவிட் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…