சுத்தமா சரியில்லை…மோசமான பீல்டிங் செட்! ருதுராஜை விமர்சித்த அம்பதி ராயுடு!

Ambati Rayudu about Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.

ஏப்ரல் 23 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210  ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்ததாக 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. லக்னோ அணி  ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த நிலையில், 19.3 ஓவரில்  4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் வேக பந்துவீச்சாளர் தீபக் சஹர் சில முறை தடுக்க வேண்டிய பந்துகளை பவுண்டரிக்கு விட்டார்.

அவர் அந்த பந்துகளை பவுண்டரிக்கு விடாமல் தடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அவருடைய பீல்டிங் சுத்தமாக சரியில்லை எனவும், ஒரு சிலர் அவரை சரியான இடத்தில் பீல்டிங்கிற்கு நிற்க வைத்து இருக்கலாம் கேப்டன் சரியாக செயல்படவில்லை என சிலரும்   விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ‘சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டெத் ஓவர்களில் மோசமான பீல்ட் செட் -அப் செய்து இருந்தார் என விமர்சித்து பேசியுள்ளார்.

சென்னை அணி தோல்வி அடைந்த பிறகு ஜியோ சினிமாவில் நடந்த பேட்டியில் அம்பதி ராயுடு சென்னை அணியை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அம்பதி ராயுடு “ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் சி அனுபவம் இல்லாதது லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த  போட்டியில் நன்றாகவே எனக்கு தெரிந்தது.

ஏனென்றால், டெத் ஓவர்களில் அவர் ரொம்பவே மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்து வைத்து இருந்தார். அது சுத்தமாக சரியில்லை. அவர் டெத் ஓவர்களில்  அந்த மாதிரியான ஒரு பீல்ட் பிளேஸ்மென்ட்  செய்து இருக்க கூடாது. இதனை வைத்து தான் நான் அவருக்கு கேப்டனாக அனுபவம் இல்லை அதனால் தான் அப்படியான மோசமான  பீல்ட் செட் செய்து இருக்கிறார் என்று கூறுகிறேன்.” எனவும் அம்பதி ராயுடு கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்