2019 உலககோப்பைக்கு முன்பு இந்தியா அணியிலும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் நல்ல ஃபார்ம்மில் இருந்த அம்பதி ராயுடு உலகக்கோப்பை அணி அறிவிப்பில் அவர் பெயர் இடம் பெறும் என ரசிகர்களும் , சில கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்த்த நிலையில் அவரது பெயர் இந்திய அணியில் இடம்பெறவிலை .அவருக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தார்.
அதனால் அம்பதி ராயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் 3டி கண்ணாடி டிவிட் போட்டிருந்தார்.
அந்த டிவிட்டிற்கு பிறகு போடும் இதுவே முதல் டிவிட் ஆகும் .
ஐதராபாத்தை சேர்ந்த அம்பதி ராயுடு கிரிக்கெட் சங்கத்தின் மேல் ஊழல் இருப்பதாக புகார் விடுத்துள்ளார்.?
ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அம்பதி ராயுடு கடந்த சனிக்கிழமை அன்று இது தொடர்பாக ‘தெலுங்கானா அமைச்சரான கே டி ராமராவுக்கு’ டேக் செய்து டிவிட் பதிவிட்டுருந்தார். அந்த டிவிட்யில் ஐதராபாத் சங்கம் ஊழலில் உள்ளது. இப்படி பணம் மற்றும் உழல்வாதிகள் நிரம்பி இருந்தால் எப்படி ஐதராபாத் கிரிக்கெட் முன்னேறும் ? இதை உடனடியாக விசாரிக்குமாறு கேட்டிருந்தார்.
இதை தொடர்ந்து அவர் கூறும்போது-ரஞ்சி போட்டியில் விளையாட தயாராக இருந்தேன். ஐதராபாத் கிரிக்கெட்டில் அதிகம் அரசியல் மற்றும் ஊழல் உள்ளதால் அதனால் ஐதராபாத் அணிக்காக விளையாடமாட்டேன் என்று கூறிருந்தார்.பின்பு புதிய தலைவரான அசாருதீனிடம் இந்த பிரச்சனையை குறித்து பேசியுள்ளேன். அவர் தக்க நடவேடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் திறமை இல்லாத வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டியிருக்கிறார்கள்.பணம் மற்றும் அரசியல்வாதியின் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று விவாதித்து உள்ளார்.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசாருதீனிடம் விசாரிக்கும் பொழுது அம்பதிராயுடுவின் புகாரை பற்றி அவர் கூறுகையில் ‘விரக்தி அடைந்த கிரிக்கெட் வீரர்’ என்று குறிப்பிட்டுருந்தார்.
மேலும் ஹைதராபாத் அணிக்கு முதல் தர கிரிக்கெட் விளையாடுவதற்கு சில வாரங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு ஒரு நாள் [எச்சிஏயில்] ஊழல் நடந்ததாக ராயுடு குற்றம் சாட்டினார்.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய அணி விளையாடி கொண்டிருக்கும் போது இடையில் தனது ஓய்வை அறிவித்தார். அதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரது ஓய்வை திரும்ப பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…