உலகக்கோப்பையில் இடம் கிடைக்காததால் சர்வதேச போட்டிகளில் இருந்து அம்பதி ராயுடு ஓய்வு அறிவிப்பு !
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அம்பதி ராயுடு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கைமாறியது.
அதற்கு அம்பதி ராயுடு ஏற்கனவே தனது ஆதங்கத்தை வெளிப்படையாக கூறி இருந்தார். மேலும் தவான் , விஜய் சங்கர் காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து வெளியேறினர்.அதன் பிறகும் மாற்று வீரர் பட்டியலில் அம்பதி ராயுடு பெயர் இடம் பெறவில்லை.
மாற்று வீரர்கள் பட்டியலில் ரிஷாப் பண்ட் , மயங்க அகர்வால் ஆகிய இருவருமே இடம் பெற்றனர்.இதனால் உலகக்கோப்பையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் அம்பதி ராயு இருந்தார்.
இந்நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டில் வந்து தங்கள் அணிக்காக விளையாடும் படி கேட்டுக்கொண்டனர்.இதை தொடர்ந்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு தான் சர்வதேச போட்டிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்தார்.