அதிவேக சதம் விளாசிய வங்கதேச வீரர், என்ற சாதனையை முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார்.
மார்ச் 20 (நேற்று) சில்ஹெட்டில் அயர்லாந்துக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் சதம் அடித்து ஒருவருடைய சாதனையை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 35 வயதான முஷ்ஃபிகுர் ரஹிம் நேற்று நடத்த இந்த போட்டியில் 60 பந்துகளில் அதிரடியாக விளையாடி 100 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம், சர்வதேச (ODI) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் விளாசிய வங்கதேச வீரர் என்ற, சாதனையை படைத்தார். இவருக்கு முன்பு கடந்த 2009-ஆம் ஆண்டு ஷகிப் அல் ஹசன் 63 பந்துகளில் சதம் அடித்திருந்தார். தற்போது அந்த 14 ஆண்டுகால சாதனையை 60 பந்துகளில் 100 ரன்கள் குவித்து முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார்.
மேலும், நேற்று நடைபெற்ற அயலர்ந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்து. அடுத்ததாக மழையின் காரணமாக போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. எனவே, மழை தொடர்ந்ததால் ஆட்டம் முடிவின்றி நிறுத்திவைக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…