அசத்தல்…சர்வேதச ODI போட்டியில் ‘அதிவேக சதம்’…! 14 ஆண்டு சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்.!

Default Image

அதிவேக சதம் விளாசிய வங்கதேச வீரர், என்ற சாதனையை முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார். 

மார்ச் 20 (நேற்று)  சில்ஹெட்டில் அயர்லாந்துக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் சதம் அடித்து ஒருவருடைய சாதனையை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 35 வயதான முஷ்ஃபிகுர் ரஹிம் நேற்று நடத்த இந்த போட்டியில்  60 பந்துகளில் அதிரடியாக விளையாடி 100 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம், சர்வதேச (ODI) ஒரு நாள் கிரிக்கெட்  போட்டியில் அதிவேக சதம் விளாசிய வங்கதேச வீரர் என்ற, சாதனையை படைத்தார். இவருக்கு முன்பு கடந்த 2009-ஆம் ஆண்டு ஷகிப் அல் ஹசன் 63 பந்துகளில் சதம் அடித்திருந்தார். தற்போது அந்த 14 ஆண்டுகால சாதனையை 60 பந்துகளில் 100 ரன்கள் குவித்து  முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார்.

மேலும், நேற்று நடைபெற்ற அயலர்ந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்து. அடுத்ததாக மழையின் காரணமாக போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. எனவே, மழை தொடர்ந்ததால் ஆட்டம் முடிவின்றி நிறுத்திவைக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்