அசத்தல் பேட்டிங் ..அபார பவுலிங் ..! வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி ..!

SLvIND , 1st T20

SLvIND : இந்திய அணி ஜிம்பாபே தொடருக்குப் பிறகு இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இன்று முதல் டி20I  போட்டியை இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வாலும், கில்லும் இணைந்து நல்ல ஒரு கூட்டணி அமைத்து விளையாடினர்கள்.

சீரான இடைவெளியில் இருவரும் விக்கெட்டை இழக்க அவர்களை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவருடன் இணைந்த ரிஷப் பண்டும் அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.

இதன் காரணமாகவே இந்திய அணியின் ஸ்கோர் 200 ரண்களை கடந்தது. இறுதியில், 20 ஓவருக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 26 பந்துக்கு 58 ரன்கள் எடுத்தார்.

அதே போல இலங்கை அணியில் அதிகபட்சமாக மத்தீஷா பத்திரனா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனை தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்கினார்கள்.

இந்திய அணியை போலவே இலங்கை அணியும் முதல் விக்கெட்டுக்கு அபாரமாக கூட்டணி அமைத்து விளையாடினார்கள். அதில் குசல் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு மற்றொரு தொடக்க வீரரான பத்தும் நிசன்ங்கா அணிக்கு தொங்க நின்று விளையாடினார்.

அவர் இந்திய அணியின் பவுலர்களை நான்கு பக்கம் சிதறடித்தார், இதனால் இலங்கை அணி இலக்கை நோக்கி விரைவாக நெருங்கத் தொடங்கியது. இருப்பினும் நிசான்கா 79 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

மேலும், அவரது விக்கெட்டை தொடர்ந்து அடுத்தடுத்து இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால், கையில் இருந்த போட்டியை இலங்கை அணி தவறவிட்டது. இதன் விளைவாக 20 ஓவரில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால், இந்திய அணி 43 ரன்களில் முதல் டி20I போட்டியை வெற்றி பெற்றுள்ளது. மேலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் புதிய தலைமை பயிற்சியாளரான கம்பீர் வெற்றியுடன் தனது பணியை தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்