மேட்சை மாற்றிய மிரட்டலான கேட்ச்..! மிரள வைத்த சால்ட் – டிம் டேவிட்.., பெங்களூரு த்ரில் வெற்றி!
மும்பை அணி வெற்றி பெரும் தருவாயில், பில் சால்ட் மற்றும் டிம் டேவிட் இணைந்து பவுண்டரியில் ஒரு பரபரப்பான கேட்ச் பிடித்து மைதானத்தை மிரள வைத்தனர்.

மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி மும்பை அணிக்கு 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதனை சேஸ் செய்து ஆடிய மும்பை அணி வீரர்கள் பாண்டியா மற்றும் திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென சரிந்ததால் இறுதி ஓவர் வரை போராடி மும்பை தோல்வியைத் தழுவியது.
அதன்படி, பத்தாண்டுகளுக்கு பின் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. மும்பையின் கோட்டையில் வைத்தே அந்த அணிக்கு பெங்களூரு அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. 5 போட்டிகளில் விளையாடிய மும்பை அணிக்கு இது 4வது தோல்வி. வெற்றிக்காக கடைசிவரை போராடிய மும்பை அணி இறுதியில் இலக்கை எட்ட முடியவில்லை.
மிரட்டிய சால்ட் – டிம் டேவிட்
இறுதியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20வது ஓவரில் மும்பை அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட தீபக் சாஹர், பந்தை தூக்கி அடிக்க, அதை பவுண்டரி லைனில் ஃபில் சால்ட் பிடித்தார். பந்தை பிடித்து டிம் டேவிட்டிடம் வீசிவிட்டு பவுண்டரி லையனுக்குள் சால்ட் விழுந்தார். இந்த மிரட்டலான கேட்ச்சும் பெங்களூரு அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.
𝘾𝙖𝙩𝙘𝙝𝙚𝙨 𝙬𝙞𝙣 𝙮𝙤𝙪 𝙢𝙖𝙩𝙘𝙝𝙚𝙨 💥
Phil Salt & Tim David pulled off a game-changing blinder at the ropes! ❤️
Scorecard ▶️ https://t.co/Arsodkwgqg#TATAIPL | #MIvRCB | @RCBTweets pic.twitter.com/gJxRuQGEyV
— IndianPremierLeague (@IPL) April 7, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025