2023 உலகக்கோப்பை : 19-வது லீக் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியாக இந்த போட்டி இருக்கும் என்றே கூறலாம். ஏனென்றால், இந்த இரண்டு அணிகளின் ஃபார்ம் இந்த உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக உள்ளது.
குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதிய போட்டியில் இந்தியா தான் வெற்றி வெற்றிபெற்றது. அதைப்போல, நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் மோதிய பாகிஸ்தான் அணி இந்த இரண்டுஅணிகளையும் தோற்கடித்துள்ளனர். இதனால் இரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளனர்.
முடிவுக்கு வந்தது மோதல்… விராட் கோலியை கட்டியணைத்தது குறித்து ஆப்கன் வீரர் நவீன் ஓபன் டாக்!!
இதற்கிடையில், போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போட்டி அழுத்தமான போட்டி என்று நினைக்கவில்லை. ஏனென்றால், இதற்கு முன்பு நாங்கள் இந்திய அணியுடன் பல போட்டிகள் இணைந்து விளையாடி இருக்கிறோம்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் எங்களுக்கு நிறையவே ஆதரவு கிடைத்தது, அதே போல் அகமதாபாத்திலும் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். கடந்த காலத்தில் நடந்தது முக்கியமில்லை அதையெல்லாம் மறந்துவிட்டு வரும் காலத்தின் மீது நம்பிக்கை வைப்போம். தொடர் வெற்றிகள் எல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக முறியடிக்கப்படும்.
ஒருநாள் உலகக் கோப்பை: இதுவே முதல்முறை.. ஒரே போட்டியில் 4 பேர் அதிரடி சதம்!
இன்று நடைபெறவுள்ள போட்டியில் வேண்டுமானாலும் நடக்கலாம் அதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். எங்களுடைய அணி இந்த உலகக்கோப்பை போட்டியில் நல்ல பார்மில் இருப்பதாக நான் உணர்கிறேன். அதற்கு உதாரணமாக நான் சொல்வது என்றால் கடந்த 3 போட்டிகளில் நங்கள் விளையாடிய விதம் என்று சொல்லவேன்.
வழக்கமாகவே, இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மிகவும் தீவிரமாகவே எதிர்பார்த்து காத்துகொண்டு இருப்பார்கள். எங்களை நம்பி நிறைய ரசிகர்கள் வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது” எனவும் பாபர் அசாம் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று சூசகமாக கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…