வெற்றிகள் எல்லாம் முறியடிக்கப்படும்! இந்தியாவுடனா போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!

ind vs pak 2023

2023 உலகக்கோப்பை : 19-வது லீக் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியாக இந்த போட்டி இருக்கும் என்றே கூறலாம். ஏனென்றால், இந்த இரண்டு அணிகளின்  ஃபார்ம் இந்த உலகக்கோப்பை போட்டியில்  சிறப்பாக உள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதிய போட்டியில் இந்தியா தான் வெற்றி வெற்றிபெற்றது. அதைப்போல, நெதர்லாந்து,  இலங்கை ஆகிய அணிகளுடன் மோதிய பாகிஸ்தான் அணி இந்த இரண்டுஅணிகளையும் தோற்கடித்துள்ளனர். இதனால் இரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளனர்.

முடிவுக்கு வந்தது மோதல்… விராட் கோலியை கட்டியணைத்தது குறித்து ஆப்கன் வீரர் நவீன் ஓபன் டாக்!!

இதற்கிடையில், போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போட்டி அழுத்தமான போட்டி என்று நினைக்கவில்லை. ஏனென்றால், இதற்கு முன்பு நாங்கள் இந்திய அணியுடன் பல போட்டிகள் இணைந்து விளையாடி இருக்கிறோம்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் எங்களுக்கு நிறையவே ஆதரவு கிடைத்தது, அதே போல் அகமதாபாத்திலும் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். கடந்த காலத்தில் நடந்தது முக்கியமில்லை அதையெல்லாம் மறந்துவிட்டு வரும் காலத்தின் மீது நம்பிக்கை வைப்போம். தொடர் வெற்றிகள் எல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக முறியடிக்கப்படும்.

ஒருநாள் உலகக் கோப்பை: இதுவே முதல்முறை.. ஒரே போட்டியில் 4 பேர் அதிரடி சதம்!

இன்று நடைபெறவுள்ள போட்டியில் வேண்டுமானாலும் நடக்கலாம் அதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். எங்களுடைய அணி இந்த உலகக்கோப்பை போட்டியில் நல்ல பார்மில் இருப்பதாக நான் உணர்கிறேன். அதற்கு உதாரணமாக நான் சொல்வது என்றால் கடந்த 3 போட்டிகளில் நங்கள் விளையாடிய விதம் என்று சொல்லவேன்.

வழக்கமாகவே, இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மிகவும் தீவிரமாகவே எதிர்பார்த்து காத்துகொண்டு இருப்பார்கள். எங்களை நம்பி நிறைய ரசிகர்கள் வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது” எனவும் பாபர் அசாம் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று சூசகமாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்