Dinesh Karthik [File Image]
பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் தனது ஆல்-டைம் இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியை அனைத்து வடிவங்களிலும் தேர்வு செய்தார். பெங்களூரில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது தன்னுடைய சுவாரசியமான இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியை தேர்ந்தெடுத்தார்.
முதலாவதாக, வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் ஷர்மாவை இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்தார். இவர்களுடைய தொடக்க ஆட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, இவர்களை தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்ததை பார்த்த ரசிகர்கள் நாங்களும் இப்படி தான் தேர்வு செய்து இருப்போம் என கூறிவருகிறார்கள்.
மிடில் ஆர்டரில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகிய மூன்று பேரையும் தேர்வு செய்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் மிடில் ஆர்டரில் ருத்ர தாண்டவமான விளையாட்டை விளையாடுவார்கள். எனவே,இவர்களை ஆல்-டைம் பேவரைட் அணியில் கார்த்திக் தேர்வு செய்து இருக்கிறார்.
ஆல்-ரவுண்டர் இடங்கள் யுவராஜ் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா பெயரை தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா முன்னதாக விளையாடிய ஒருநாள் போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பை வெற்றிகளில் யுவராஜின் முக்கிய பங்கு இருப்பதை வைத்து தேர்வு செய்துள்ளார். சுழல் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரையும், ஹர்பஜன் சிங் 12வது வீரராகவும் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்தார்.
வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கான். ஹர்பஜன் சிங்.
இவர் தேர்வு செய்த அணியை பார்த்த ரசிகர்கள், ‘இருந்தாலும் தோனியை விக்கெட் கீப்பராக எடுத்துக்கலாம்’ என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…