அனைத்து பெருமையும் தோனிக்கே.. சதம் அடித்த விண்டீஸ் கேப்டன் புகழாரம்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் அற்புதமாக விளையாடினார். இவர் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் கேப்டன் ஷாய் ஹோப் 83 பந்தில் 4பவுண்டரி, 7 சிக்ஸர் உடன் 109* ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் “இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்த பெருமையை சேரும். அணியின் வெற்றிக்கு எனது சதம் தான் காரணம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். சில வருடங்களுக்கு முன் தோனியிடம் பேசினேன். எதிர்பார்த்ததை விட அதிக நேரம் க்கீஸில் இருக்க முயற்சி செய்யுங்கள் என்று, முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை காப்பது முக்கியம் எனக் கூறினார். அவர் கூறியது போலவே இன்றும் அப்படியே விளையாடினேன்.

இந்த வெற்றியின் மூலம் தொடரை வெற்றியுடன் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அடுத்த போட்டியிலும் இதே தொடர்வோம் என்று நம்புகிறேன். கேட்ச்களை  கைவிடுவது போன்ற தவறுகளை மீண்டும் நடக்காமல் கவனமாக இருப்போம்” என கூறினார்.  சிக்ஸர் அடித்து வெற்றியை பதிவு செய்த கேப்டனும், விக்கெட் கீப்பரும்,  பேட்ஸ்மேனுமான  ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 325 ரன்கள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 326 ரன்கள் இலக்குடன் களமிறங்க வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவரில் 6 விக்கெட் இழந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் கொண்டு ஒரு நாள் தொடரிலும், ஐந்து போட்டியில் கொண்டு டி20 தொடரிலும் விளையாட உள்ளது. நாளை மறுநாள் இந்த இரு அணிகளுக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்