எட்டு அணிகள் கொண்ட 4-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி .என் .பி .எல் ) 20-ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற 19-ம் தேதி தொடங்க உள்ளது.தொடக்க லீக் போட்டியில் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோத உள்ளது.
மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது.அதில் தலா 15 போட்டிகள் நெல்லை ,நந்தம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஒரு போட்டிகள் கொண்ட நாள்களில் போட்டி இரவு 07.15 மணிக்கு தொடங்கும் .இரண்டு போட்டிகள் கொண்ட நாள்களில் 03.15 மணிக்கும் ,07.15 மணிக்கும் தொடங்கும்.இறுதி போட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சென்னையில் டி .என் .பி .எல் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .அப்போது பேசிய இந்திய அணியின் அல் ரவுண்டர் விஜய் சங்கர் ,டி .என் .பி .எல் கிரிக்கெட் இளம் வீரர்களுக்கு நல்ல அடித்தளமாகும் .இதன் மூலம் வாஷிங்டன் சங்கர் , டி .நடராஜன் ,வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஐபிஎல் தொடரில் தேர்வாகி விளையாடி உள்ளனர்.
அதேபோல இவர்கள் தமிழக அணிக்காக ராஞ்சி போட்டியில் விளையாடி உள்ளனர்.மேலும் பலர் டி .என் .பி .எல் போட்டியில் சிறப்பாக விளையாடி ஐபிஎல் போட்டியில் நுழைய வேண்டும் என விரும்புகிறேன் என கூறினார்.
டி .என் .பி .எல் தொடரில் நான் இதுவரை விளையாடியது இல்லை இந்த வருடம் நான் டி .என் .பி .எல் தொடரில் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன் என கூறினார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…