கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர்..!

Published by
murugan

உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மீண்டும் கிரிக்கெட் உலகில் நுழைந்துள்ளது. அதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் விலகியுள்ளார். இன்று காலை சான்ட்னருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் முதல் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. “பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிக்காக மிட்செல் சான்ட்னர் ஈடன் பார்க் செல்லமாட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அவர் கண்காணிக்கப்படுவார்”என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 226 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 61,  கேன் வில்லியம்சன் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தானில் ஷாஹீன் அப்ரிடி, அப்பாஸ் அப்ரிடி, தலா 3 விக்கெட்டையும்,  ஹாரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டையும் பறித்தனர்.

ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த டேவிட் வார்னர்!

227 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 57,  சைம் அயூப் 27  ரன்கள் எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டி கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Recent Posts

RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!

கவுகாத்தி : ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 இன் 6வது போட்டி…

5 hours ago

RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!

கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!

சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.…

7 hours ago

“கிரிக்கெட் உலகிற்கு விராட் கோலி ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார்” – மார்கஸ் ஸ்டோய்னிஸ்.!

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின்…

8 hours ago

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…

9 hours ago

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழக்கு தள்ளுபடி.!

தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…

9 hours ago