நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராத்வெய்ட் மூன்று ஓவர் வீசி விக்கெட் பறிக்காமல் 33 ரன்கள் கொடுத்தார்.அதில் இரண்டு வைடு கொடுத்தார். இந்நிலையில் பிராத்வெய்ட் 42 -வது ஓவர் வீசும் போது அவர் வீசிய ஒரு பந்தை வைடு என நடுவர் கூறியதால் கோபம் அடைந்த பிராத்வெய்ட் வைடு இல்லை என நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அந்த பந்து வைடு தான் என நடுவர் மீண்டும் கூறியதால் பிராத்வெய்ட் நடுவரை பார்த்து முறைத்தார். பிராத்வெய்ட் செய்த செயல் ஐசிசி விதிமுறைக்கு எதிராக இருந்ததால் அவருடைய சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…