காயம் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.
நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ரியான் பராக் ஓவரில் கெயில் அடித்த பந்தை ஓடி வந்து டைவ் அடித்து பென் ஸ்டோக்ஸ் கேட்சை பிடித்தார். இந்த கேட்சை பிடித்தபோது காயம் ஏற்பட்டது. காயத்துடன் பென் ஸ்டோக்ஸ் போட்டியில் விளையாடினார்.
பின்னர், போட்டி முடிந்த பிறகு வலி அதிகமானது. இதனால், ஸ்கேன் செய்யப்பட்டது. இந்த ஸ்கேனில் கையில் விரல் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கைவிரல் முறிவு காரணமாக பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 1 ஓவர் வீசி 12 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. மேலும், பேட்டிங்கிலும் டக் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…