தாடையில் அடிபட்டு ரத்ததுடன் விளையாடிய அலெக்ஸ் !
இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ரன்கள் அடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.இவரை தொடர்ந்து டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். அதில் 2 பவுண்டரி அடங்கும்.
பின்னர் களமிங்கிய ஸ்டீவன் ஸ்மித் , பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.ஸ்டீவன் ஸ்மித் உடன் இணைந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னில் வெளியேறினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்த நிலையில் இருக்கும் போது விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி , ஸ்டீவன் ஸ்மித் உடன் இணைந்து சிறப்பாக விளையாடி வந்தார்.அப்போது இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 8-வது ஓவர் வீசினார். அவர் வீசிய பவுன்சர் பந்து ஓன்று அலெக்ஸ் கேரி தாடையில் அடித்தது.அதில் அலெக்ஸ் கேரிஅணிந்து இருந்த ஹெல்மேட் கழண்டு விழுந்தது.
பின்னர் ஆஸ்திரேலிய அணி மருத்துவ குழு அலெக்ஸ் கேரிக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அலெக்ஸ் கேரி விளையாட மாட்டார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரத்தக்காயத்துடன் அலெக்ஸ் கேரி நிதானமாக விளையாடி 70 பந்திற்கு 46 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.