அக்சர் படேல் 7 இன்னிங்சில் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முதல் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து அணியில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். அதன் பின்னர், களம் கண்ட நியூஸிலாந்து அணி நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி 57 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 129 ரன்கள் சேர்த்தனர். களத்தில் டாம் லாதம் 50*, வில் யங் 75* ரன்கள் எடுத்து இருந்தனர்.
இன்றைய 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்து நியூஸிலாந்து அணி விக்கெட்டை பறிகொடுக்க தொடங்கியது. சிறப்பாக விளையாடி வந்த டாம் லாதம் 95, வில் யங் 89 ரன்கள் குவித்தனர். பின்னர் களம் கண்ட வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய அணி 49 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இப்போட்டியில் இந்திய வீரர் அக்சர் படேல் 34 ஓவரில் 64 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டை பறித்து சாதனை படைத்துள்ளார். அக்சர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதில், 7 இன்னிங்சில் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டை ஐந்து முறை குறைந்த இன்னிங்ஸில் வீழ்த்திய பட்டியலில் அக்சர் படேல் இணைந்துள்ளார்.
அதில்,
6 இன்னிங்ஸில் – ரோனி ஹாக் (1978)
7 இன்னிங்ஸில் – சார்லி டர்னர் (1887-1888)
டாம் ரிச்சர்ட்சன் (1893-1895)
அக்சர் படேல் (2021)
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…