பந்து வீச்சில் மிரட்டிய அக்ஸர் படேல், அவேஷ் கான்- 129 ரன்னில் சுருண்ட மும்பை அணி..!
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதி வருகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் மும்பை அணியின் தொடக்க வீரராக ரோஹித், குவின்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலேயே ரோகித் பவுண்டரி அடிக்க அடுத்த ஓவரில் ரோகித் 7 எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் சூரியகுமார் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த குவின்டன் டி காக் 19 ரன் எடுத்து அக்சார் படேல் ஓவரில் அன்ரிச் நார்ட்ஜேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து திவாரி களமிங்க அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 33 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் கண்ட அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை திவாரி 15, கீரான் பொல்லார்ட் 6 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த ஹர்திக் பாண்டியா 17 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
டெல்லி அணியில் அவேஷ் கான், அக்ஸர் படேல் தலா மூன்று விக்கெட்டையும், அன்ரிச் நார்ட்ஜே , அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர். 130 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.