Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நடப்பாண்டில் அசத்தலாக விளையாடி வருகிறார். இதுவரை 9போட்டிகள் விளையாடி இருக்கும் அவர் 14 விக்கெட்கள் எடுத்து இத சீசனில் அதிகம் விக்கெட் எடுத்த வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இருப்பினும் கடைசியாக அவர் விளையாடிய 2 போட்டிகளில் அவர் சரியாக விளையாட வில்லை என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து இருக்கிறார்.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா ” மும்பை அணிக்கு பும்ராவின் பந்துவீச்சு பெரிய அளவில் உதவி வருகிறது. பும்ரா கடந்த இரண்டு போட்டிகளில் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நான் நினைக்கிறேன். ஆனால், அது அந்த இரண்டு போட்டிகளில் மட்டும் தான் நடந்தது இன்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.
கண்டிப்பாக இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் பும்ரா விக்கெட்கள் விழ்த்துவார் என்று நான் நம்புகிறேன். கடந்த 2 போட்டிகளில் நடக்காத மாதிரி பழைய பும்ராவாக அவர் இந்த போட்டியில் திரும்புவார் என்று நான் நிச்சியமாக சொல்வேன். என்னுடைய கவனம் எல்லாம் முழுக்க முழுக்க அவர் மீது தான் இருக்கிறது. கண்டிப்பாக இன்று பும்ராவின் மேஜிக் நடக்கும்” என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஆகாஷ் சோப்ரா ” கடைசியாக டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கும். சூர்யகுமார் யாதவ் கொஞ்சம் பொறுமையாக விளையாடி இருந்தால் கண்டிப்பாக நான் உறுதியாக மும்பை அணி வெற்றி பெற்று இருக்கும் என்று தான் சொல்வேன்” எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…