இந்த வெற்றிக்கு காரணம் இவர்தான்: ராஜஸ்தான் கேப்டன் ரஹானே புகழாரம்
- இரண்டாவது பாதியில் ஈரம் பந்தில் நிற்கும் என்று எங்களுக்கு தெரியும். அதனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள முதலில் பந்து வீச நினைத்தோம்
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பார்த்திவ் படேல் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து எளிதான இலக்குடன் களமிறங்கிய துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அற்புதமாக ஆடினார் அவர் 43 பந்துகளில் 59 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க 19.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டியது.
இந்த வெற்றிக்கு ஒரு பேசிய ராஜ்ஸ்தாந் கேப்டன் அஜின்கியா ரஹானே பேசியதாவது…
இரண்டாவது பாதியில் ஈரம் பந்தில் நிற்கும் என்று எங்களுக்கு தெரியும். அதனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள முதலில் பந்து வீச நினைத்தோம். டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் எதிராகஸ்ரேயஸ் கோபால் அற்புதமாக பந்துவீசினார். அவரே ஆட்டத்தை திசை திருப்பினார். இந்த வெற்றிக்குக் காரணம் அவர்தான் என்று புகழாரம் சூட்டினார் அஜின்கியா ரஹானே.