இன்று நடைபெறும் போட்டியின் மைதானத்தின் மேலே விமானங்கள் பறக்கத் தடை!
உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த ஜூன் 29-ம் தேதி நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும் ,ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. அப்போட்டியின் போது மைதானத்தின் மேலே “பாகிஸ்தானுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் விமானம் ஓன்று பறந்து சென்றது.
இந்த செயலுக்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் மீண்டும் லீட்ஸில் நடைபெற்ற போட்டியின் போது இந்தியா -இலங்கை அணிகள் மோதிய போது அப்போது மைதானத்தின் மேலே “காஷ்மீருக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் பேனர் ஒன்றை விமானம் சுமந்து சென்றது.இதற்கும் ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்தது.
இதை பற்றி ஐசிசி கூறுகையில் ,இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.உலக்கோப்பை போட்டியின் போது இது போன்ற அரசியல் கோஷங்களை நாங்கள் ஆதரிப்பது இல்லை.இது தொடர்பாக போலீஸ் உதவியுடன் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என ஐசிசி அறிவித்து உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் அரையிறுதி முதல் போட்டியில் இந்தியா -நியூஸிலாந்து அணி மோத உள்ளது.அதனால் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தின் மேல இன்று விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.