தென் ஆப்ரிக்கா அணியின் புதிய டி-20 கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்துவந்த டெம்பா பவுமா, டி-20 போட்டிகளில் தனது கேப்டன் பதவியிலிருந்து கடந்த மாதம் விலகினார், இதனையடுத்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரம், அணியின் புதிய டி-20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
28 வயதான மார்க்ரம் தலைமையில் ஏற்கனவே 19 வயதுக்கான உலகக்கோப்பையை 2014இல் தென்னாபிரிக்க அணி வென்றுள்ளது. மேலும் கேப்டன் பதவியில் அனுபவமுள்ள மார்க்ரம், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த அறிமுக SA-20 லீக் தொடரில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, மார்க்ரம் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது.
மேலும் தென்னாப்பிரிக்காவில் இந்த மாதம் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டிசுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து பவுமா நீக்கப்பட்டுள்ளார். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடர்ந்து பவுமா, கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் இயக்குனர் ஏனோச் என்க்வே, இது குறித்து கூறும்போது மார்க்ரமிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார், மேலும் கடந்த இருவருடங்களாக தென்னாப்பிரிக்க அணியை சிறந்த முறையில் வழிநடத்திய பவுமாவுக்கு நன்றி தெரிவித்த என்க்வே, அணியின் முன்னேற்றத்திற்காக தற்போது சில புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…