தென்னாப்பிரிக்க அணி கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிப்பு.!

Default Image

தென் ஆப்ரிக்கா அணியின் புதிய டி-20 கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்துவந்த டெம்பா பவுமா, டி-20 போட்டிகளில் தனது கேப்டன் பதவியிலிருந்து கடந்த மாதம் விலகினார், இதனையடுத்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரம், அணியின் புதிய டி-20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

28 வயதான மார்க்ரம் தலைமையில் ஏற்கனவே 19 வயதுக்கான உலகக்கோப்பையை 2014இல் தென்னாபிரிக்க அணி வென்றுள்ளது. மேலும் கேப்டன் பதவியில் அனுபவமுள்ள மார்க்ரம், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த அறிமுக SA-20 லீக் தொடரில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, மார்க்ரம் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும் தென்னாப்பிரிக்காவில் இந்த மாதம் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டிசுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து பவுமா நீக்கப்பட்டுள்ளார். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடர்ந்து பவுமா, கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் இயக்குனர் ஏனோச் என்க்வே, இது குறித்து கூறும்போது மார்க்ரமிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார், மேலும் கடந்த இருவருடங்களாக தென்னாப்பிரிக்க அணியை சிறந்த முறையில் வழிநடத்திய பவுமாவுக்கு நன்றி தெரிவித்த என்க்வே, அணியின் முன்னேற்றத்திற்காக தற்போது சில புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்