‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Daniel Vettori

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு வலுவான அணியாக இருந்து வருகிறது. மேலும் இந்த அணி முதலில் பேட்டிங் செய்தால் எதிரணிகள் கதிகலங்கும் அளவிற்கு டார்கெட்டை செட் செய்வதில் வல்லவர்கள். தொடக்க வீரரான டிராவீஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, அவரை தொடர்ந்து களமிறங்கும் கிளாஸ்சன் என இவர்களின் அதிரடி இந்த ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பியது.

ஐபிஎல் தொடரின் இதுவரை அதிகமாக செட் செய்த டார்கெட்டுகளில் இதற்கு முன் ஆர்சிபி அணி செட் செய்த டார்கெட்டான 264 இருந்து வந்தது ஆனால் அந்த சாதனையை எஸ்ஆர்எச் 277 என்ற டார்கெட்டை மும்பை அணிக்கு எதிராக வைத்து அந்த பெங்களூரு அணியின் சாதனையை அணி முறையடித்தது. மேலும் அவர்கள் செட் செய்த டார்கெட்டை மீண்டும் ஒரு முறை 287 என டார்கெட் செட் செய்து உடைத்தனர்.

மேலும், ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த மூன்று அணிகளையும் எஸ்.ஆர்.எச் அணி சந்தித்த போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை அவர்களது சொந்த மண்ணில் இந்த தொடரின் இரண்டாவது முறையாக சந்தித்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதற்கு காரணம் பெங்களூரு அணியின் மிகச் சிறந்த பவுலிங் ஆகும். இந்த போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், “உங்கள் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் சிறப்பான டார்கெட் நிர்ணயம் செய்வோம் என்று. ஆனால் நாங்கள் இனி இலக்கை துரத்துவதற்கு கவனம் செலுத்த உள்ளோம்.

மேலும், அடுத்த போட்டியாக சேப்பாக்கத்தில் ஒரு நல்ல அணியான சிஎஸ்கேவை  சந்திக்க உள்ளோம். எனவே இந்த தோல்வியை நாங்கள் கடந்து விடுவோம். சேப்பாக்கம் மைதானம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு நாங்கள் அதற்கான யுக்திகளை பயன்படுத்தி வேறு வழியில் செல்ல உள்ளோம், அந்த போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன.

மேலும், எங்கள் ஓப்பனர்கள் விளையாடும் 14 போட்டியிலும் சிறப்பாக திகழ வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதே போல எங்கள் வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையப் போவதுமில்லை”, என்று போட்டி முடித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து டேனியல் வெட்டோரி பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்