“யுவராஜ் சிங்கிற்கு பிறகு சஞ்சு சாம்சன் தான்”…புகழ்ந்து தள்ளிய சஞ்சய் பங்கர்!
புகழ்பெற்ற யுவராஜ் சிங்கிற்கு பிறகு சிக்ஸர்களை அடிப்பதில் சிறந்தவர் என்றால் சஞ்சு சாம்சன் தான் என சஞ்சய் பங்கர் பாராட்டினார்,
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி தயாராகி வரும் நிலையில், அணியில் விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய அறிவிப்பை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு வீரர்களுடைய பெயர் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பற்றிய விவரத்தில் கசிந்து வருகிறது.
அப்படி தான் கடந்த சில நாட்களாகவே சஞ்சு சம்சனுக்கு இந்த தொடரில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தான் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர் இந்த போட்டியில் விளையாடுவது ரசிகர்கள் கனவு மட்டுமின்றி முன்னாள் வீரர்களுடைய ஆசையாகவும் இருந்து வருகிறது.
பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சஞ்சு சம்சனை இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்குங்கள் என கூறி வருகிறார்கள். அப்படி தான் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் “யுவராஜ் சிங்கிற்கு பிறகு சஞ்சு சாம்சன் தான் சிறப்பாக சிக்ஸர் அடித்துக்கொண்டு இருக்கிறார்” என பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக தனக்கு கிடைத்து வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விளையாடி வருகிறார் என்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரும் சிறப்பான ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்று தெரிகிறது.
அவருடைய அதிரடி ஆட்டத்தில் அவருடைய விளையாட்டின் தைரியம் எனக்கு தெரிகிறது. முதல் பந்தில் இருந்தே பந்துகளை சிக்ஸர் பறக்கவிடுவதற்கு நினைக்கிறார். இதை மாதிரியான ஆட்டம் நான் இதற்கு முன் யுவராஜ் சிங்கிடம் பார்த்திருக்கிறேன். அவருக்கு அடுத்ததாக அதேமாதிரியான ஆட்டம் சஞ்சு சாம்சனிடம் தான் பார்க்கிறேன். இருவருடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கிறது” எனவும் சஞ்சய் பங்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.