கிரிக்கெட்

சச்சின், ரோஹித் பிறகு உலகக்கோப்பையில் சாதனை படைத்த டேவிட் வார்னர்..!

Published by
murugan

நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஐசிசி உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் மூத்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நேற்று முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா 212 ரன்கள் எடுக்க 213 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் 60 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பதிவு செய்தனர். அதிலும் வார்னர் பவர்பிளேயில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தபோது ஆறாவது ஓவரில் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் மார்க்ரம் வார்னரை போல்ட் செய்தார்.

முதல் ஆஸ்திரேலிய வீரர்:

வார்னர் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் 528 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக 500 ரன்னிற்கு மேல் கடந்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

2019 உலகக்கோப்பையில் வார்னர் முதல் முறையாக 500 ரன்னிற்கு மேல் அடித்தார். வார்னரைத் தவிர ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் (2007), மேத்யூ ஹெய்டன் (2007) மற்றும் ஆரோன் பின்ச் (2019) ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்காக ஒரே உலகக் கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

இரண்டு உலகக்கோப்பைகளில் 500 ரன்னிற்கு மேல் எடுத்த வீரர்கள்:

இந்த சாதனை மூலம் இவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார். இரண்டு உலகக்கோப்பைகளில் 500 ரன்னிற்கு  எடுத்த மூன்றாவது வீரர் வார்னர் ஆவார். முன்னதாக, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2003  உலகக்கோப்பைகளிலும், இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் 2019 மற்றும் 2023 உலகக்கோப்பைகளில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

7 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

7 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

9 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago