தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தம் – ஐசிசி அறிவிப்பு…!

தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது.
இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் சவுத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. சரியான நேரத்தில் போட்டி தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அங்கு மழை பெய்ய தொடங்கியது.
இதனால், இந்தியா-நியூசிலாந்து இடையே முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்தது. தற்போது மழை நின்று உள்ளதால் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 07:30 மணிக்கு ஆடுகளத்தை ஆய்வு செய்த பின்னர் இன்று விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்தது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் உள்ளூர் நேரப்படி நாளை காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.
Due to persistent rain, play has been abandoned on day one of the #WTC21 Final in Southampton ⛈️#INDvNZ pic.twitter.com/Vzi8hdUBz8
— ICC (@ICC) June 18, 2021