ஜெய்ஸ்வாலுக்கு பிறகு இவர் தான் ..இவராலும் செய்ய முடியும்! மைக்கேல் வாகன் பேட்டி!

Michael Vaughan

சென்னை : யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடுத்த படியாக அபிஷேக் சர்மா தான் அனைத்து வித கிரிக்கெட்டிலும் தகுதியானவர் என மைக்கேல் வாகன் கூறி இருக்கிறார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும் இளம் பேட்ஸ்ட்மேன் தான் அபிஷேக் சர்மா. இவர் இந்த ஐபிஎல் தொடரில் 41 சிக்ஸர்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி கைப்பற்றியுள்ள விராட் கோலியை தாண்டி முன்னிலையில் இருக்கிறார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, 155.78 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் 467 ரன்களை குவித்துள்ளார்.

தற்போது, இவரை புகழ்ந்ததுடன் இவர் அனைத்து வித கிரிக்கெட்டிருக்கும் தகுதியுடையவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் தற்போது கிரிக்பஸ்ஸுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அவர் பேசிய போது,”இந்த ஆண்டு இந்திய அணிக்கு ஐபிஎல் தொடரிலிருந்து அபிஷேக் சர்மா கிடைத்துள்ளார் எப்படி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக கிடைத்தாரோ அதே போல இந்த ஆண்டு இந்திய அணிக்கு கிடைத்தவர் தான் அபிஷேக் சர்மா.

கடந்த ஆண்டு ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதும் உடனே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. மேலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் வெற்றி பெற்றவராக இருக்கிறார். இதை அபிஷேக் சர்மாவாலும் செய்ய முடியும், அவருக்கும் நல்ல பேட்டிங் டெக்னிக் கிடைத்திருப்பதால் அவராலும் ஜெய்ஸ்வாலை போல இந்திய அணிக்காக மூன்று வடிவத்திலும் விளையாட முடியும்.

அவர் பிரையன் லாரா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரிடம் இருந்த வில்லோ ஸ்விங்கை கற்றுக்கொண்டு உள்ளார். ஜெய்ஸ்வாலை பற்றி கூற வேண்டும் என்றால் ஒரு ஆச்சரியமான கதை. சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்ததிலிருந்து அவர் ஆதிக்கம் அதிகமாகசெலுத்த தொடங்கினார். அவர் விளையாடுவதை பார்க்கும் பொழுது 15 வருடம் கிரிக்கெட் அனுபவம் கொண்டவர் விளையாடியவது போன்று இருக்கும். தற்பொழுது, அபிஷேக் ஷர்மாவுக்கும் அது வெகு தொலைவில் இல்லை”, என கிரிக்பஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் மைக்கேல் வாகன் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்