கிரிக்கெட்

ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!

Published by
மணிகண்டன்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ளும் முறை, தங்கள் அணி வீரர்களை விடுவிக்கும் முறை என ஐபிஎல் அணிகள் விறுவிறுப்பாக நிறைவு செய்துள்ளன.

நேற்று கடைசி நாள் என்பதால், எந்த அணி, எந்த வீரர்களை விடுவித்துள்ளது, எந்த அணி வீரர்களை வாங்கியுள்ளது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

உ.பி-யில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு..!

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை பிசிசிஐ-இடம் ஒப்பந்த விவரங்களை இரு அணிகளும் அளித்துள்ளன. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா திரும்பியுள்ளார்.  அதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கண்ட இரு அறிவிப்புகளையும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர். அதே போல, மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த கேமரூன் கிரீனை பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

Recent Posts

இல்லாத அளவிற்கு உயர்ந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி! முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…

6 minutes ago

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோ :  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…

2 hours ago

வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…

3 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

4 hours ago

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

4 hours ago

‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…

5 hours ago