சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது நடந்து வரும், விஜய் ஹசாரே 2022 கோப்பையின் போட்டியில் மஹாராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒவரில் 7 சிக்ஸர் உட்பட 43 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.
இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், மகாராஷ்டிர கிரிக்கெட் வீரர் அஜீம், தனது கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய கிரிக்கெட் வீரர் அஜீம் “விரைவில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆகலாம், மேலும் அவர் தோனிக்கு அடுத்த படியாக வரலாம். கடந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக தேந்தெடுக்க அணியின் முயற்சி தோல்வியடைந்தது.
இதனால் , எதிர்காலத்தில் சென்னை அணியை வழிநடத்த தோனிக்கு பிறகு சிறந்த வீரராக ருதுராஜ் கெய்க்வாட் வரலாம். புதிய விஷயங்கள் பலவற்றை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு வருகிறோம். அணியில் ஒரு வீரர் மேம்படுத்த அவரது ஆலோசனைகள் உதவியாக இருக்கிறது .” என புகழ்ந்து பேசியுள்ளார் அஜீம்.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…