இந்தியாவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கடைக்காரரும் பணம் வாங்குவதில்லை- ரிஸ்வான்
இந்தியாவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கடைக்காரரும், என்னிடம் பணம் வாங்குவதில்லை என்று ரிஸ்வான் கூறியுள்ளார்.
2021 டி-20 உலகக்கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியாவை, பாகிஸ்தான் வீழ்த்திய பிறகு பாகிஸ்தானின் எந்த கடைக்காரரும் என்னிடம் பணம் வாங்குவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட்டர் மொஹம்மது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைகளில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது என்ற வரலாற்றை மாற்றி பாகிஸ்தான் அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட்டர் மொஹம்மது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாமுடன் சேர்ந்து 152 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி வென்று புதிய வரலாறு படைத்தனர்.
இது குறித்து பேசிய ரிஸ்வான், இந்த போட்டியில் வெற்றி பெற்றவுடன் நாம் வெற்றி பெற்றது ஒரு ஆட்டத்தில் மட்டும்தான் என்று எனக்கு தோன்றியது, ஆனால் நாங்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிய பிறகு நான் எந்த கடையில் சென்றாலும் பணம் வாங்க மறுக்கிறார்கள். அதன் பிறகு தான் எனக்கு இந்த வெற்றியின் அருமை புரிந்தது.
நீங்கள் செல்லுங்கள், உங்களிடம் நாங்கள் பணம் பெறமாட்டோம், உங்களுக்கு இங்கு எல்லாமே இலவசம் தான் என்று பாகிஸ்தான் கடைக்காரர்கள் சொன்னார்கள். இந்த அன்புதான் பாகிஸ்தான் மக்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது என்று ரிஸ்வான் மேலும் கூறினார்.