அஷ்வினுக்கு பதில் களமிறங்கிய மும்பை ஆல்-ரவுண்டர்! யார் இந்த தனுஷ் கோட்டியான்?
அஷ்வின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்டியான் இடம் பெற்றுள்ளார். இவர் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. கடைசியாக பிரிஸ்பேனில் நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட் ஆட்டம் முடிவில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென தனது ஓய்வை அறிவித்தார்.
38 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின், சர்வதேச போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அதிகளவில் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே போல டெஸ்ட் போட்டிகளில் ஒரு நல்ல ஆல் ரவுண்டராகவும் தனது பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்ப்பை ஆற்றியுள்ளார். இவரது திடீர் ஓய்வு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவரது இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி பலரது மனதில் இருந்தது.தற்போது அதற்கான விடையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்திய அணியில் அஷ்வினுக்கு பதில் தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வலது கை ஆஃப் ஸ்பின்னரான இவர் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக அறியப்படுகிறார்.
2017ஆம் ஆண்டு மும்பையில் இருந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான U19 இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று ஆசிய கோப்பை தொடரில் ரியான் பராக், அர்ஷ்தீப் சிங் உடன் விளையாடியுள்ளார் தனுஷ். ஆனால், 2018ல் நடைபெற்ற U19 உலகக்கோப்பை தொடரில் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணியில் இவர் இடம்பெறவில்லை.
அடுத்து தொடர்ந்து மும்பை அணி சார்பாக விளையாடி வரும் தனுஷ், வினு மங்கட் டிராபி தொடரில் சீனியர் அணியில் இடம் பிடித்தார். 2018இல் சீனியர் மும்பை அணிக்காக களமிறங்கிய தனுஷ் சௌராஷ்டிரா அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 25.7 எனும் பேட்டிங் சராசரி கொண்டுள்ளார். தற்போது வரை 101 விக்கெட்க பேட்டிங் சராசரி 25.7
அடுத்ததாக மும்பை அணிக்காக களமாடி, ராஞ்சி கோப்பையில் 41.21 பேட்டிங் சராசரரியுடன் 1,525 ரன்கள் குவித்துள்ளார். அதில் 2 சதம், 13 அரை சதம் அடங்கும். இந்த திறன் மிக்க ஆல்ரவுண்டரை கடந்த 2024இல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி வாங்கியது. அனால் கடந்த சீசனில் அவருக்கு பெரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தனுஷ் கோட்டியான் இதற்கு முன்னரே மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார் என்பதால், தற்போது ஆஸ்திரேலியாவில் தான் தொடர் நடைபெறுகிறது என்பதாலும், இவருக்கு பார்டர் கவாஸ்கர் தொடர் விளையாடும் வாய்ப்பு வந்துள்ளது. ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஆல் ரவுண்டர்கள் இடம்பெற்று இருப்பதால் 26ஆம் தேதி தொடங்கும் 4வது டெஸ்டின் தனுஷ் களமிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.